×

உத்தராகண்ட் தொழிலாளர்களை மீட்க உதவும் தமிழ்நாடு தொழில்நுட்பம்: உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவி..!

தெஹ்ராதூண்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் நம்பிக்கை அளித்துள்ளது. உத்தரகாண்ட் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கி இருப்பது 11வது நாளை எட்டியுள்ளது. உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் நம்பிக்கை அளித்துள்ளது. பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம் உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது. திருச்செங்கோடு பி.ஆர்.டி. நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பி.ஆர்.டி.ஜி-5 என்ற ரிக் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

360 டிகிரியில் சுழலக் கூடிய ரிக் இயந்திரம், கடுமையான பாறைகளையும் உடைத்து துளையை ஏற்படுத்தக் கூடியதாகும். திருச்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம், ரிக் இயந்திரத்தை ஹிமாச்சலம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பயன்படுத்தி வருகிறது. உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியிருந்த நிலையில் தரணி ஜியோ டெக் நிறுவனத்தை மீட்புக் குழு அணுகியுள்ளது. மீட்புக் குழு உதவி கோரியவுடன் உடனடியாக ரிக் இயந்திரம், விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரிக் இயந்திரம் மூலம் குழாய் பொருத்தும் பணி 2 முறை தோல்வி அடைந்த நிலையில் 3-வது முயற்சிக்கு பலன் கிடைத்தது.

விபத்து நடந்த இடத்தில் 6 அங்குலம் விட்டத்தில் சுமார் 110 அடி ஆழத்தில் துளை ஏற்படுத்தி சிமென்ட்ரி தொழில்நுட்பம் மூலம் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிமென்ட்ரி தொழில்நுட்பம் மூலம் அமைத்த குழாய் வழியாகத்தான் தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. 11-வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியால் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளது.

The post உத்தராகண்ட் தொழிலாளர்களை மீட்க உதவும் தமிழ்நாடு தொழில்நுட்பம்: உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவி..! appeared first on Dinakaran.

Tags : UTTARAKHAND ,Tamil Nadu ,
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...